2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகரத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளில் இரண்டு பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.

நேற்று ஆரம்ப நிகழ்வுடன் உத்தியோகபூர்வமாக 21ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்தபோதும் விளையாட்டுக்கள் இன்றே ஆரம்பித்திருந்தன.

இதில், பளு தூக்கலிலேயே இலங்கைக்கு இரண்டு பதக்கங்களும் கிடைத்திருந்தன.

பெண்களுக்கான 48 கிலோகிராம் பிரிவிலேயே இலங்கையின் டினூஷா ஹன்சனி கோமஸ் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். மொத்தமாக 155 கிலோகிராம் நிறையைத் தூக்கியே டினூஷா ஹன்சனி கோமஸ் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.

தனது இரண்டாவது முயற்சியில் 70 கிலோகிராம் நிறையைத் தூக்கியிருந்த டினூஷா ஹன்சனி கோமஸ், 74 கிலோகிராம் நிறையைத் தூக்குவதில் தோல்வியடைந்தார். இதன்பின்னர் கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் முதல் முறையில் 85 கிலோகிராம் நிறையைத் தூக்கியிருந்த டினூஷா ஹன்சனி கோமஸ் 90 கிலோகிராம் நிறையைத் தூக்கிவதில் தோல்வியடைந்திருந்தார்.

குறித்த பிரிவில், மொத்தமாக 196 கிலோகிராம் நிறையைத் தூக்கி இப்பிரிவில் சாதனை படைத்து, இந்தியாவின் சானு சைக்கொம் மிர்பாய் தங்கப் பதக்கம் வென்றதுடன், மொத்தமாக 176 கிலோகிராம் நிறையைத் தூக்கி மொறீஷியஸின் மேரி றனிவொஸோவா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேவேளை, இப்பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் முதலாவது பதக்கத்தை சத்துரங்க லக்மால் வென்றிருந்தார்.

ஆண்களின் 56 கிலோகிராம் எடைப் பிரிவிலேயே, மொத்தமாக 248 கிலோகிராம் நிறையைத் தூக்கி சத்துரங்க லக்மால் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.  114 கிலோகிராம் எடையை தனது முயற்சியில் தூக்கியிருந்த சத்துரங்க லக்மால், கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் 134 கிலோகிராமை தூக்கியிருந்தார்.

இதேவேளை, மொத்தமாக 261 கிலோகிராமைத் தூக்கிய மலேஷியாவின் முஹமட் அஸ்றோய் ஹஸவாலா குறித்த பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதுடன், சத்துரங்க லக்மாலை விட ஒரு கிலோவே கூடுதலாக, மொத்தமாக 249 கிலோகிராம் எடையைத் தூக்கிய இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கம் வென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X