2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளிடம் வீழ்ந்த இலங்கை

Shanmugan Murugavel   / 2021 மார்ச் 04 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், அன்டிகுவாவில் இன்று அதிகாலை நடைபெற்ற முதலாவது போட்டியில் இலங்கை தோல்வியடைந்தது.

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற மேற்கிந்தியத் தீவுகளின் அணித்தலைவர் கெரான் பொலார்ட், தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என அறிவித்தார்.

இலங்கை சார்பாக அஷேன் பண்டார, பத்தும் நிஸங்க ஆகியோர் அறிமுகத்தை மேற்கொண்டிருந்ததுடன், மேற்கிந்தியத் தீவுகள் ச்சார்பாக கெவின் சின்கிளேயர் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, பத்தும் நிஸங்கவின் 39 (34), நிரோஷன் டிக்வெல்லவின் 33 (29) ஓட்டங்களோடு 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ஓவர்களில் 131 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு, 132 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள், எவின் லூயிஸின் 28 (10), லென்டில் சிமொன்ஸின் 26 (15) ஓட்டங்களோடு வேகமான ஆரம்பத்தைப் பெற்றது.

எனினும், அகில தனஞ்சயவிடம் ஹட்-ட்ரிக் விக்கெட்டுகளாக எவின் லூயிஸ், கிறிஸ் கெய்ல், நிக்கலஸ் பூரான் ஆகியோர் அடுத்தடுத்து நான்காவது ஓவரில் ஆட்டமிழந்திருந்தனர்.

இந்நிலையில், தனஞ்சயவின் அடுத்த ஓவரின் ஆறு பந்துகளிலும் ஆறு ஓட்டங்களைப் பெற்றிருந்த பொலார்ட் 38 (11) ஓட்டங்களைப் பெற்றிருந்தார். சிமொன்ஸ், பொலார்ட், பேபியன் அலனின் விக்கெட்டுகளை வனிடு ஹஸரங்க கைப்பற்றியபோதும், டுவைன் பிராவோவின் பங்களிப்போடு ஜேஸன் ஹோல்டர் பெற்ற ஆட்டமிழக்காத 29 (24) ஓட்டங்களோடு 13.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கை மேற்கிந்தியத் தீவுகள் அடைந்தது. ஹஸரங்க நான்கு ஓவர்களில் 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

இப்போட்டியின் நாயகனாக பொலார்ட் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .