2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மீண்டும் தலைவராக அஞ்சலோ மத்தியூஸ்

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருது இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்குள், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கான அணிகளின் தலைவரான அஞ்சலோ மத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஞ்சலோ மத்தியூஸ், அணித்தலைமை பதவியை இராஜினாமா செய்த பின்னர், டெஸ்ட் போட்டிகளுக்கான இலங்கையணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், அப்பதவியை அவர் தக்க வைத்துள்ளதோடு, பங்களாதேஷில் இடம்பெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலும் தினேஷ் சந்திமால் இடம்பிடித்துள்ளார்.

 

தினேஷ் சந்திமால் தவிர, துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ், சுழற்பந்துவீச்சு சகலதுறை வீரர் வனிடு ஹசரங்கவும் குழாமுக்குத் திரும்பியுள்ளனர். இதேவேளை, புதுமுக வீரரான வேகப்பந்துவீச்சாளர் ஷெகான் மதுஷங்கவும் குழாமில் இடம்பெற்றுள்ளார்.

குழாம்: அஞ்சலோ மத்தியூஸ் (அணித்தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமால், குசல் பெரேரா, திஸர பெரேரா, அசேல குணரட்ன, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, ஷெகான் மதுஷங்க, அகில தனஞ்சய, லக்‌ஷன் சந்தகான், வனிடு ஹசரங்க.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .