2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீண்டும் முதல்நிலை வீரராக றபடா

Editorial   / 2018 மார்ச் 13 , பி.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில், தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் கஜிஸோ றபடா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையத் தொடர்ந்தே றபடா இரண்டாமிடத்திலிருந்து முதலாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 பந்துவீச்சாளர்களின் வரிசை பின்வருமாறு

  1. கஜிஸோ றபடா, 2. ஜேம்ஸ் அன்டர்சன், 3. இரவீந்திர ஜடேஜா, 4. இரவிச்சந்திரன் அஷ்வின், 5. ஜொஷ் ஹேசில்வூட், 6. நீல் வக்னர், 7. ரங்கன ஹேரத், 8. வேர்ணன் பிலாந்தர், 9. மிற்சல் ஸ்டார்க், 10. நேதன் லையன்.

இதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் 154 ஓட்டங்களைப் பெற்ற தென்னாபிரிக்காவின் சிரேஷ்ட வீரர் ஏ.பி டி வில்லியர்ஸ், டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 12ஆம் இடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தைப் பிடித்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான முதல் 10 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை பின்வருமாறு

  1. ஸ்டீவ் ஸ்மித், 2. விராத் கோலி, 3. ஜோ றூட், 4. கேன் வில்லியம்சன், 5. டேவிட் வோணர், 6. செட்டேஸ்வர் புஜாரா, 7. ஏ.பி டி வில்லியர்ஸ், 8. அஸார் அலி, 9. ஹஷிம் அம்லா, 10. அலிஸ்டயர் குக்.

இந்நிலையில், நன்னடத்தைக் கோவையின் இரண்டாவது பிரிவில் குற்றம் புரிந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மூன்று குற்றப் புள்ளிகளைப் பெற்று கடந்த 24 மாதங்களில் மொத்தமாக எட்டு குற்றப் புள்ளிகளையடைந்ததையடுத்து கஜிஸோ றபடாவுக்கு டெஸ்ட் போட்டிகள் இரண்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அவுஸ்திரேலியாவுக்கெதிரான எஞ்சியுள்ள மிகுதி இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் றபடா தவறவிடவுள்ளார்.

இந்நிலையில், குறித்த தடைக்கெதிராக மேன்முறையீடு செய்ய வேண்டுமென்றால் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையும் றபடாவும் 48 மணித்தியாலங்களுக்குள் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் அவுஸ்திரேலியாவின் முதலாவது இனிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்த பின்னர் அவருடன் மோதியமைக்காகவே குறித்த தண்டனையை றபடா எதிர்நோக்குகின்ற நிலையில், அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இனிங்ஸில் டேவிட் வோணரை ஆட்டமிழக்கச் செய்த பின்னர் அவரை நோக்கி கூச்சலிட்டதற்காக றபடாவின் குறித்த போட்டிக்கான ஊதியத்தின் 15 சதவீதம் அபராதமும் ஒரு குற்றப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X