2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லின் உள்ளே: மக்ஸ்வெல் வெளியே

Editorial   / 2018 ஜனவரி 04 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலியக் குழாமில் அதிரடித் துடுப்பாட்ட வீரரான கிளென் மக்ஸ்வெல் சேர்க்கப்படாத நிலையில், தோட்பட்டை காயத்திலிருந்து அண்மையிலேயே மீண்ட கிறிஸ் லின் குழாமில் இடம்பெற்றுள்ளார். இதுதவிர, ஆஷஸில் சிறப்பாகச் செயற்பட்ட விக்கெட் காப்பாளர் டிம் பெய்ன், இறுதியாக 2011ஆம் ஆண்டிலேயே ஒருநாள் சர்வதேசப் போட்டியில் விளையாடியிருந்த நிலையில் தற்போது குழாமில் இடம்பெற்றுளார்.

வேகப்பந்துவீச்சுப் பக்கம், ஜகை றிச்சர்ட்ஸன், அன்றூ டை ஆகியோர் இருபதுக்கு – 20 போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டிருந்த நிலையில், தற்போது குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

குழாம்: ஸ்டீவ் ஸ்மித் (அணித்தலைவர்), டேவிட் வோணர், பற் கமின்ஸ், ஆரோன் பின்ஞ், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், கிறிஸ் லின், மிற்செல் மார்ஷ், டிம் பெய்ன், ஜகை றிச்சர்ட்ஸன், மிற்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டோனிஸ், அன்றூ டை, அடம் ஸாம்பா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .