2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

லிவர்பூல், டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றன

Editorial   / 2018 மார்ச் 04 , பி.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுகிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், டொட்டென்ஹாம் யுனைட்டெட் ஆகிய அணிகள் வென்றுள்ளன.

தமது மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், நியூகாசில் யுனைட்டெட்டை லிவர்பூல் வென்றிருந்தது. இப்போட்டியின் முதற்பாதி முடிவடைய ஐந்து நிமிடங்கள் இருக்கையில், அலெக்ஸ் ஒக்ஸ்லேட் சம்பர்லின் வழங்கிய பந்தை மொஹமட் சாலா கோலாக்க முன்னிலை பெற்ற லிவர்பூல், இரண்டாவது பாதி ஆரம்பித்த 10 நிமிடங்களில், றொபேர்ட்டோ பெர்மினோவிடமிருந்து பெற்ற பந்தை சாடியோ மனே கோலாக்கியதோடு போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலேயே ஹட்டர்ஸ்பீல்ட் டெளண் அணியை டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்ற்றிருந்தது. டெலே அல்லி கொடுத்த மிகச் சிறப்பான பந்தை போட்டியின் 27ஆவது நிமிடத்தில் சண் ஹெயுங் மின் கோலாக்க முன்னிலை பெற்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், போட்டியின் இரண்டாவது பாதியில் 54ஆவது நிமிடத்தில் ஹரி கேனிடமிருந்து வந்த பந்தை சண் ஹெயுங் மின் கோலாக்கியதோடு, போட்டியின் இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .