2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வென்று முதலிடத்தில் இன்டர் மிலன்

Editorial   / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், நேற்று  இடம்பெற்ற கெய்வோ அணியுடனான போட்டியில் 5-0 என்ற கோல் கணக்கில் வென்ற இன்டர் மிலன், சீரி ஏ புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு உயர்ந்துள்ளது. குறித்த இன்டர் மிலன் சார்பாக இவான் பெரிசிக் மூன்று கோல்களையும் மெளரோ இகார்டி, மிலான் ஸ்கிறீனியர் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ள இன்டர் மிலன், சீரி ஏ புள்ளிகள் தரவரிசையில் முதலிடத்திலுள்ளது. இன்டர் மிலனை விட ஒரு புள்ளி குறைவாக 38 புள்ளிகளைப் பெற்றுள்ள நாப்போலி தரவரிசையில் இரண்டாமிடத்திலுள்ளதுடன், நாப்போலியை விட ஒரு புள்ளி குறைவாக 37 புள்ளிகளைப் பெற்றுள்ள ஜுவென்டஸ் மூன்றாமிடத்திலுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .