2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளியேற்றப்பட்டார் நடப்புச் சம்பியன் ஒஸாகா

Editorial   / 2019 மார்ச் 13 , பி.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியாவின் இன்டியன் வெல்ஸில் இடம்பெற்றுவரும் பி.என்.பி பரிபஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, நடப்புச் சம்பியனான ஜப்பானின் நயோமி ஒஸாகா வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற, சுவிற்ஸர்லாந்தின் பெலின்டா பென்சிச்சுடனான நான்காவது சுற்றுப் போட்டியில், 3-6, 1-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தே, உலகின் முதல்நிலை வீராங்கனையான நயோமி ஒஸாகா வெளியேறியிருந்தார்.

இதேவேளை, உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான, றோமானியாவின் சிமோனா ஹலெப், இன்று அதிகாலை இடம்பெற்ற செக் குடியரசின் மார்கெட்டா வொன்ட்ராசோவாவுடனான தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 2-6, 6-3, 2-6 என்ற செட் கணக்கில் தோற்று தொடரிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், நேற்றிரவு  இடம்பெற்ற தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 7-5, 1-6, 4-6 என்ற செட் கணக்கில், ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸாவிடம் தோற்று வெளியேறியிருந்தார்.

இதேவேளை, உலகின் ஐந்தாம் நிலை வீராங்கனையான, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில், 7-6 (7-0), 4-6, 6-2 என்ற செட் கணக்கில், எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்டை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதுதவிர, உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினா, இன்று அதிகாலை இடம்பெற்ற அவுஸ்திரேலியாவின் அஷ்லெய் பார்ட்டியுடனான தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 7-6 (10-8), 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பர், தனது நான்காவது சுற்றுப் போட்டியில், 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில், உலகின் ஒன்பதாம் நிலை வீராங்கனையான பெலாரஸின் அர்யானா சபலெங்காவை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, நேற்றிரவு இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-4, 6-4 என்ற நேர் செட்களில், ஜேர்மனியின் பிலிப் கொஷ்னைடரிடம் தோல்வியடைந்து, உலகின் முதலாம் நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், தொடரிலிருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், உலகின் ஆறாம்நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரி, நேற்றிரவு இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், போலந்தின் ஹுபேர்ட் ஹுர்க்கச்சிடம் 6-4, 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, உலகின் இரண்டாம் நிலை வீரரான, ஸ்பெய்னின் ரபேல் நடால், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-1 என்ற நேர் செட்களில், ஆர்ஜென்டீனாவின் டியகோ ஸ்வார்ட்ஸ்மனை வென்று, நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்தார்.

இந்நிலையில், உலகின் மூன்றாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், இன்று அதிகாலை இடம்பெற்ற சக சுவிற்ஸர்லாந்தவரான ஸ்டாவ் வவ்றிங்காவுடனான மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்கு முன்னேறினார்.

இதேவேளை, உலகின் ஒன்பதாம் நிலை வீரரான, ஐக்கிய அமெரிக்காவின் ஜோன் இஸ்னர், இன்று அதிகாலை இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-3, 6-4 என்ற நேர் செட்களில், ஆர்ஜென்டீனாவின் குவைடோ பெல்லாவை வென்று நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X