2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வெளியேற்றப்பட்டார் முதல்நிலை வீராங்கனை ஒஸாகா

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புளாரிடவில் இடம்பெற்றுவருகின்ற மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரிலிருந்து, உலகின் முதல்நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா வெளியேற்றப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், தாய்வானின் ஷெ சு-வேயிடம் 4-6, 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தே தொடரிலிருந்து நயோமி ஒஸாகா வெளியேறியிருந்தார்.

இதேவேளை, இன்று  அதிகாலை இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 4-6, 6-4, 1-6 என்ற செட் கணக்கில் கனடாவின் பியானா அன்ட்ரெஸ்காவுடம் தோல்வியடைந்த உலகின் நான்காம்நிலை வீராங்கனையான ஜேர்மனியின் அங்கெலிக் கேர்பரும் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் டொனா வெகிச்சை வென்ற உலகின் இரண்டாம்நிலை வீராங்கனையான பெட்ரா குவிற்றோவா, நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது மூன்றாவது சுற்றுப் போட்டியில், 3-6, 6-0, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்லோவாக்கியாவின் விக்டோரியா குஸ்மோமாவை வென்ற உலகின் எட்டாம்நிலை வீராங்கனையான நெதர்லாந்தின் கிகி பேர்ட்டன்ஸ், நான்காவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று  அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெய்னின் டேவிட் பெரரை எதிர்கொண்ட உலகின் மூன்றாம்நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்ஸான்டர் ஸவ்ரேவ், 6-2, 5-7, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, இன்று அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், மோல்டோவாவின் றடு அல்போட்டை எதிர்கொண்ட உலகின் ஐந்தாம்நிலை வீரரான சுவிற்ஸர்லாந்தின் ரொஜர் பெடரர், 4-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், நேற்றிரவு இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஸ்பெய்னின் ஜெளமே முனாரை 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற உலகின் ஏழாம்நிலை வீரரான தென்னாபிரிக்காவின் கெவின் அன்டர்சன், மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று  அதிகாலை இடம்பெற்ற தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், 7-6 (7-4), 6-1 என்ற நேர் செட்களில் ஐக்கிய அமெரிக்காவின் மக்கென்ஸி மக்டொனால்டை வென்ற கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸ், மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இடதுமுழங்கால் காயம் காரணமாக, உலகின் 10ஆம்நிலை வீராங்கனையான ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இத்தொடரிலிருந்து விலகினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X