2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெஸ்ட் ப்ரோம்விச்சை வென்றது செல்சி

Editorial   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று  இடம்பெற்ற வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனுடனான போட்டியில் இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் நடப்புச் சம்பியன்களான செல்சி வென்றுள்ளது.

செல்சியின் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஒலிவர் ஜிரோட்டுடன் பந்தைப் பரிமாறிக் கொண்டு வந்த ஈடின் ஹஸார்ட் போட்டியின் 25ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் காரணமாக செல்சி முன்ன்னிலை பெற்றது.

இதன்பின்னர் போட்டியின் 63ஆவது நிமிடத்தில் விக்டர் மோஸஸ் பெற்ற கோலின் காரணமாக தமது முன்னிலையை இரட்டிப்பாக்கிக் கொண்ட செல்சி, போட்டியின் 71ஆவது நிமிடத்தில் ஈடின் ஹஸார்ட் பெற்ற தனது இரண்டாவது கோலோடு 3-0 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றது.

அந்தவகையில், இப்போடியின் முடிவில், இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில், 72 புள்ளிகளுடன் மன்செஸ்டர் சிற்றி முதலிடத்திலும் 56 புள்ளிகளுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் இரண்டாமிடத்திலும் 54 புள்ளிகளுடன் லிவர்பூல் மூன்றாமிடத்திலுமுள்ளன. செல்சி 53 புள்ளிகளுடன் நான்காமிடத்திலும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் 52 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும் ஆர்சனல் 45 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும் காணப்படுகின்றன.

இப்போட்டிக்கு முன்பதாக, போர்ண்மெத், வட்போர்ட் ஆகிய அணிகளிடம் செல்சி தொடர்ச்சியாக தோல்வியைத் தளுவியிருந்த நிலையில், செல்சியின் முகாமையாளர் அன்டோனியோ கொன்டேயின் எதிர்காலம் சந்தேகத்துக்கிடமானதாக மாறியிருந்தது. இந்நிலையில், இப்போட்டி முழுவதும் செல்சியின் இரசிகர்கள் அன்டோனியோ கொன்டேயின் பெயரை உச்சரித்தவாறு இருந்தனர்.

எவ்வாறெனினும் இரசிகர்களின் ஆதரவு பரவலாக அன்டோனியோ கொன்டேக்கிருந்தாலும் கடந்த பருவகாலத்தில் செல்சிக்கு இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தைப் பெற்றுக் கொடுத்த அன்டோனியோ கொன்டேயை செல்சியின் உரிமையாளர் ரோமன் அப்ரமோவிச் நடப்பு பருவகால முடிவில் பிரதியீடு செய்வாரென்றே எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .