2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஸ்பெய்ன், ஆர்ஜென்டீனா, செக் குடியரசு வென்றன

Editorial   / 2017 நவம்பர் 12 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற சிநேகபூர்வ போட்டிகளில், ஸ்பெய்ன், ஆர்ஜென்டீனா, செக் குடியரசு ஆகியன வென்றுள்ளன.

ஸ்பெய்ன், 5-0 என்ற கோல் கணக்கில் கொஸ்டாறிக்காவை வென்றது. ஸ்பெய்ன் சார்பாக, டேவிட் சில்வா இரண்டு கோல்களையும் ஜோர்டி அல்பா, அல்வரோ மொராட்டா, அன்றே இனியஸ்டா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.

ஆர்ஜென்டீனா, 1-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வென்றது. ஆர்ஜென்டீனா சார்பாகப் பெறப்பட்ட கோலை சேர்ஜியோ அகுரோ பெற்றிருந்தார்.

செக் குடியரசு, 1-0 என்ற கோல் கணக்கில் கட்டாரை வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .