2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஸ்மித், பெரிக்கு உயர் விருதுகள்

Editorial   / 2018 பெப்ரவரி 13 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்தும் சிறந்த வீராங்கனையாக எலைஸி பெரியும் தெரிவாகினர்.

அந்தவகையில், ஸ்டீவ் ஸ்மித்தும் எலைஸி பெரியும் தமது இரண்டாவது ஆண்டின் சிறந்த வீர, வீராங்கனைகளுக்கான விருதுகளை இம்முறையுடன் பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, டெஸ்ட் போட்டிகளுக்கான ஆண்டின் சிறந்த வீரராகவும் ஸ்டீவ் ஸ்மித்தே தெரிவாகிய நிலையில், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான ஆண்டின் சிறந்த வீரராக, அணியின் உப தலைவர் டேவிட் வோணர் தெரிவாகியதோடு, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான ஆண்டின் சிறந்த வீரராக துடுப்பாட்ட வீரர் ஆரோன் பின்ஞ் தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .