2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹங்கேரியன் கிரான்ட் பிறிக்ஸ்: வென்றார் வெட்டல்

Editorial   / 2017 ஜூலை 31 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது காரில் காணப்பட்ட பிரச்சினைகள், இவ்வாண்டு ஃபோர்மியுலா வண் சம்பியன்ஷிப்புக்கான தனது வைரியான, மெர்சிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநர் லூயிஸ் ஹமில்டனின் தாக்குதலொன்றுக்கு மத்தியிலும் பதற்றம் நிறைந்த ஹங்கேரியன் கிரான்ட் பிறிக்ஸை, ஃபெராரி அணியின் ஜேர்மனிய ஓட்டுநரான செபஸ்டியன் வெட்டல் வென்றார்.

வெட்டலுக்குப் பின்னால், பந்தயத்தில் இரண்டாமிடம் பெற்ற அவரின் சக ஃபெராரி அணியின் பின்லாந்து ஓட்டுநரான கிமி றைக்கோனன் மிக வேகமாகச் செல்லக் கூடியதாக இருந்தபோதும், ஹமில்டனை முந்த விடாமல் செய்வதற்கான தடையாக ஃபெராரி அணியால் பயன்படுத்தப்பட்டிருந்தார்.

குறித்த பந்தயத்தில் மூன்றாமிடத்தை, ஹமில்டனின் சக மெர்சிடிஸ் அணியின் பின்லாந்து ஓட்டுநரான வல்ட்டேரி போத்தாஸ் பெற்றார். றைக்கோனனையும் வெட்டலையும் முந்த முயல்வதற்காக, ஹமில்டனை முன்செல்ல போத்தாஸ் முன்னர் அனுமதித்திருந்த நிலையில், றைக்கோனனையும் வெட்டலையும் முந்த முடியாததால், முன்னர் அளித்த உறுதியின்படி, போத்தாஸுக்கு மூன்றாமிடத்தை ஹமில்டன் விட்டுக் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், இப்பந்தயத்தில் ஹமில்டன் நான்காமிடம் பெற்றதோடு, வெட்டல் முதலிடம் பெற்ற நிலையில், நான்கு வார கோடை விடுமுறைக்குள் போர்மியுலா வண் செல்கையில், ஹமில்டனை விட 14 சம்பியன்ஷிப் புள்ளிகள் வெட்டல் அதிகமாகப் பெற்றுள்ளார். வெட்டல் 202 புள்ளிகளுடனும் ஹமில்டன் 188 புள்ளிகளுடனும் காணப்படுகின்றனர். 169 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் போத்தாஸ் காணப்படுகின்றார்.

பெராரியுடன் ஒப்பிடும்போது, ஹமில்டனும் அவரது மெர்சிடிஸ் அணியும் வேகத்தில் தடுமாறிய நிலையில், வெற்றிக்கு ஹமில்டன் சவால் விட்டது எதிர்பார்க்காததொன்றாகவே காணப்பட்டது.
குறித்த பந்தயத்தின், சுக்கான் பிரச்சினையால் வெட்டல் பாதிக்கப்பட்டிருந்ததோடு, ஹமில்டன் அணியிடமிருந்தான கருத்துகளை கேட்க முடியாமல் இருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X