2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

19 வயதுக்குட்போட்டோருக்கான உலகக் கிண்ணம்

Editorial   / 2018 ஜனவரி 12 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இவ்வாண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் நாளை நியூசிலாந்தில் நாளை ஆரம்பிக்கின்றது.

12ஆவது தடவையாக இம்முறை நடைபெறுகின்ற இத்தொடரானது அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2002, 2010ஆம் ஆண்டும் இத்தொடரை நியூசிலாந்து நடாத்தியிருந்த நிலையில், மூன்றாவது முறையாக இத்தொடர் நியூசிலாந்தில் இம்முறை நடைபெறுகின்றது. 

இம்முறை தொடருக்கு, 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையில் முழு அங்கத்துவ நாடுகளாக இருந்த அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகிய 10 நாடுகளும் நேரடியகாக் தகுதிபெற்றிருந்தன. இதுதவிர, 2016ஆம் ஆண்டு தொடரில், துணை அங்கத்துவ நாடுகளில் முன்னிலை பெற்ற நமீபியாவும் நேரடியாகத் தகுதிபெற்றிருந்தன.

இதுதவிர, பிராந்தியங்களில் இடம்பெற்ற தொடர்களின் வெற்றியாளர்களாக ஆப்கானிஸ்தான், கென்யா, கனடா, பப்புவா நியூ கினி, அயர்லாந்து ஆகியவையும் இம்முறை தொடருக்கு தகுதிபெற்றுள்ளன.

இதில், குறிப்பிடத்தக்க அம்சமாக கனடா அணியில் மூன்று இலங்கை வம்சாவளி தமிழர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இத்தொடரில் 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் முதலாம் திகதியன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கலாம் என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் சார்பாக கடந்தாண்டு பிரகாசித்த சுழற்பந்துவீச்சாளர் ரஷீட் கான் இத்தொடரில் பங்கேற்கக்கூடியவாறு இருந்தபோதும் அவரை தேர்வாளர்கள் தெரிவுசெய்திருக்கவில்லை.

இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் இலங்கையணிக்கு, இடதுகை சுழற்பந்துவீச்சையும், வலதுகை சுழற்பந்துவீச்சையும் மேற்கொள்ளக்கூடிய கமிந்து மென்டிஸ் தலைமை தாங்குகிறார்.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இத்தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் சம்பியனாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .