2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஸிம்பாப்வே அணியில் மீண்டும் கிராண்ட் பிளவர்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான கிராண்ட் பிளவர் 6 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்ளார்.

இம்மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள சுற்றுப்போட்டிக்கான ஸிம்பாப்வே அணியில் 39 வயதான கிராண்ட் பிளவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பிராந்திய அணிக்காக 6 வருடங்கள் விளையாடிய கிராண்ட் பிளவர்,  கடந்த ஓகஸ்ட் மாதம் ஸிம்பாப்வேயுக்குத் திரும்பிவந்து அந்நாட்டு தேசிய அணியின் பயிற்றுநராக பதவியேற்றார்.

இந்நிலையில் எதிர்வரும் 8 திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுடனான போட்டிகளுக்கான குழாமில் ஒரு வீரராக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஸிம்பாப்வே தேசிய அணிக்காக 12 வருடகாலம் விளையாடிய கிராண்ட் பிளவர் 67 டெஸ்ட் போட்டிகளில் 3457 ஓட்டங்களையும் 219 ஒருநாள் சர்வதேச போட்டிகளில்  6536 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 2004 ஆம் ஆண்டு அணித்தலைவர் பதவியிலிருந்து ஹீத் ஸ்ரீக் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அணியிலிருந்து விலகிய 12 முன்னிலை வீரர்களில் கிராண்ட் பிளவரும் ஒருவராவார்.

தென்னாபிரிக்காவுடன் இருபது ஓவர் போட்டிகள் இரண்டிலும் ஒருநாள் சர்வதேச போட்டிகள் மூன்றிலும் ஸிம்பாப்வே அணி மோதவுள்ளது.

 20 ஓவர் போட்டிக்கான குழாம்: எல்டன் சிகும்புரா, (தலைவர்) ஹமில்டன் மஸகட்ஸா, சமு சிபாபா, டடேன்டா தைபு (விக்கெட் காப்பாளர்), சிங்கிராய் மஸகட்ஸா, இயன் நிக்கல்ஸன், புரொஸ்பர் உட்சேயா, கிறேம் கிறீமர்,சார்ள்ஸ் கொவென்ரி, எட் ரெய்ன்ஸ்போர்ட்,கிறிஸ் எம்போபு, கீத் டபேங்வா, கிராண்ட் பிளவர், பிரெண்டன் டெய்லர்.

ஒருநாள் சர்வதேச போட்டிக்கான குழாம்: எல்டன் சிகும்புரா, (தலைவர்) ஹமில்டன் மஸகட்ஸா சமு சிபாபா, டடேன்டா தைபு (விக்கெட் காப்பாளர்) சிங்கிராய் மஸகட்ஸா, இயன் நிக்கல்ஸன், புரொஸ்பர் உட்சேயா, கிறேம் கிறீமர், எட் ரெய்ன்ஸ்போர்ட், கிறிஸ் எம்போபு, கீத் டபேங்வா, கிராண்ட் பிளவர், கிறேக் ஏர்வின், பிரெண்டன் டெய்லர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .