2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கிறிஸ் கெயில் - பிரட் ஹடின் மோதல்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 31 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலுக்கும், அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் பிரட் ஹடினிற்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிக்பாஷ் லீக் தொடரிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிட்னி தண்டர்ஸ் அணி சார்பாக கிறிஸ் கெயில் போட்டிகளில் பங்குபற்றி வருவதோடு, சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் தலைவராக பிரட் ஹடின் செயற்பட்டு வருகிறார்.

இரு அணிகளுக்குமிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. இதில் சிட்னி தண்டர்ஸ் அணி 133 ஓட்டங்களைப் பெற, சிட்னி சிக்ஸர்ஸ் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து இவ்விலக்கை அடைந்திருந்தது.

இதில் கிறிஸ் கெயிலின் பந்துவீச்சில் பிரட் ஹடின் ஆட்டமிழந்ததும் கிறிஸ் கெயில் தனது நெஞ்சுப் பகுதியைத் தனது கையால் அடித்ததோடு, கங்னம் வகை நடனத்தையும் ஆடியிருந்தார். இதன் காரணமாக எரிச்சலடைந்த பிரட் ஹடின், மைதான ஓரத்தில் வைத்துத் தொலைக்காட்சி நேர்முக வர்ணனையில் கிறிஸ் கெயில் பெற்றுக் கொள்ளும் ஊதியத்திற்கேற்றவாறு துடுப்பெடுத்தாட வேண்டும் எனவும், அவர் வெறுமனே கதைத்துக் கொண்டு மாத்திரமே காணப்படுகிறார் எனவும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள கிறிஸ் கெயில், இந்த உலகம் தன்னுடையது எனவும், தான் உலகச் சம்பியன் எனவும் தெரிவித்துள்ளதோடு, இடதுகைத் துடுப்பாட்ட வீரரான தான் வலது கைத் துடுப்பாட்ட வீரராக ஆடினாலும் கூட பிரட் ஹடினை விடச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

இத்தொடரில் கிறிஸ் கெயில் 6 போட்டிகளில் பங்குபற்றி 14 என்ற சராசரியில் 70 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .