2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

2024 ஒலிம்பிக்கை நடாத்துகிறது பரிஸ்

Editorial   / 2017 ஓகஸ்ட் 01 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க நகரமான லொஸ் ஏஞ்செலஸ், 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்கான தனது விருப்பத்தை நேற்று வெளிப்படுத்திய நிலையில், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை, பிரான்ஸ் தலைநகர் பரிஸ் நடாத்துவதற்கான வழி பிறந்துள்ளது.

குறித்த இணக்கமானது, இரண்டு நகரங்களுக்கும் ஒலிம்பிக்குக்கும் வெற்றி-வெற்றி என்ற நிலையொன்றை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்டப்ஹப் நிலைய அரங்கில் இடம்பெற்ற வைபவமொன்றில், ஒலிம்பிக் போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவுக்கு மீண்டும் வருகின்றன என அறிவிப்பதில் பெருமையடைகிறேன் எனத் தெரிவித்த லொஸ் ஏஞ்சலஸ் மேயர் எரிக் கர்செட்டி, 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை லொஸ் ஏஞ்சலெஸுக்கு கொன்டு வருவதாகக் கூறியுள்ளார்.

ஜப்பானின் தலைநகர் 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்கான போட்டியில் பரிஸுடன் லொஸ் ஏஞ்செல்ஸ் இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதை வென்ற நகரம், பெருவின் தலைநகர் லிமாவில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் செயற்குழுவால் அறிவிக்கப்படவிருந்தது.

இந்நிலையில், லிமாவில் இடம்பெறும் சந்திப்பிலேயே, 2024, 2028 என இரண்டு ஒலிம்பிக் போட்டிகளை, நடாத்தும் நகரங்களுக்கு வழங்க முயல்வதாக கடந்த மாதம் ஒலிம்பிக் செயற்குழு தீர்மானித்திருந்த நிலையில், 2024ஆம் ஆண்டி ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதற்கான போட்டியிலிருந்து விலகி, 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 1924ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளின் 100ஆவது ஆண்டு நிறைவில், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடாத்துவதில் தொடர்ந்தும் உறுதியாய் இருந்திருந்தது.

அந்தவகையில், 1932ஆம் ஆண்டு, 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் மூன்றாவது தடவையாக, ஒலிம்பிக் போட்டிகளை லொஸ் ஏஞ்செலஸ் நடாத்தவுள்ளது. எவ்வாறெனினும், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை லொஸ் ஏஞ்சல்ஸ் நடாத்துவதற்காக போட்டியிடுவதற்கு ஆதரவளித்த லொஸ் ஏஞ்சல்ஸ் நகர சபையும் ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் செயற்குழுவும், 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை லொஸ் ஏஞ்சல்ஸ் நடாத்துவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக, 1996ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை, அட்லாண்டாவில் ஐக்கிய அமெரிக்கா நடாத்தியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .