2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

6 டெஸ்ட் அல்லது 12 ஒருநாள் தடை

Editorial   / 2018 ஜூலை 03 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்டத்தின்போது பந்தைச் சேதப்படுத்தும் குற்றத்துக்காக, வீரர்களுக்கு விதிக்கப்படும் தண்டனையை மேலும் இறுக்கமாக்குவது குறித்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அவதானம் செலுத்தியுள்ளது.   

பந்தைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வீரர் ஒருவருக்கு, 6 டெஸ்ட் போட்டிகளில் அல்லது 12 ஒருநாள் போட்டிகளில் (சர்வதேச போட்டிகள்) பங்கேற்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

முன்னதாக, இவ்வாறான குற்றச்சாட்டை எதிர்நோக்கும் வீரருக்கு, ஒரு போட்டியில் பங்கேற்பதற்கே தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்,  தண்டனை மேலும் அதிகமாக்கப்பட்டுள்ளதாக, ஐசிசி அறிவித்துள்ளது.

மேலும், தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் தகாத வார்த்தைப் பிரயோகங்களுக்கும் தடை விதிப்பதற்கு ஐசிசி தீர்மானித்துள்ளதாக, அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவ் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக, தெளிவான சிந்தனையுடன் செயற்படத் தீர்மானித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரியாதையான ஒரு கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல், அணிகளின் வீரர்கள், ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல், அணிகளுக்கு இடையில் மரியாதையை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஐசிசி அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .