2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’ அரசியல் பழிவாங்கல் இடம்பெறாது’

வா.கிருஸ்ணா   / 2017 மே 28 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையில் எந்த அரசியல் பழிவாங்கலும் இடம்பெறாது என்பதை உறுதியாகக் கூறுவதாக அம்மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான சிகரங்களின் சமர் கிரிக்கெட் போட்டி நிகழ்வு, பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (27) மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில்; கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்வி அமைச்சைப் பொறுப்பேற்றுள்ளது. கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர், அமைச்சராக வருவதற்கு முன்பாக கல்வித் திணைக்களம் உட்பட கல்வி தொடர்பான சகல பதவிகளையும் வகித்தவர். அவர் காலத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணசபையில் எந்தவித அரசியல் பழிவாங்கலும் இடம்பெறாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்' என்றார்.

'மேலும், அரசியல்வாதிகள் பாடசாலை நிர்வாகத்தில் தலையிடக்கூடாது என்பதை நான் வரவேற்கின்றேன். அரசியல்வாதிகளாக அல்லாமல், மக்கள் பிரதிநிதிகள் பாடசாலை சமூகத்துடன் இணைந்து செல்வதன் மூலமே பாடசாலைகளை  அபிவிருத்தி செய்ய முடியும்.
அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிபர்களும் ஆசிரியர்களும் அச்சமடைவதை விட, அதிகாரிகளுக்கு அச்சப்படும் நிலைமை இருக்கின்றது. அந்த நிலைமை மாற வேண்டும்.

அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் ஆசனம் வழங்குமாறு கோரியும் அமைச்சுப் பதவி வழங்குமாறு கோரியும் கூட்டம் கூட்டமாக அரசியல் தலைமையகத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் செல்வதையே இதுவரையில் நான் கண்டுள்ளேன். ஆனால், அதிகாரிகளின் இடமாற்றத்துக்காகப் பஸ் பிடித்து அமைச்சர்களிடம் செல்லும்  நிலைமை இந்த மாவட்டத்தில் இருக்கின்றது. இந்த நிலைமையும் மாற வேண்டும்' என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .