2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு போதிய கொடுப்பனவில்லை’

Suganthini Ratnam   / 2017 ஜூன் 11 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

 

அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, வருடாந்தம் 2,000 ரூபாய் கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகின்றது. இந்தக் கொடுப்பனவு அவர்களுக்குப் போதாது என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தெரிவித்தார்.

எனவே, அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்களின் கொடுப்பனவு தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளும், இந்துமதப் பெரியார்களும், ஆலய தர்மகர்த்தாக்களும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்துசமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வுக் கொடி வாரத்தையிட்டு, திருஞான சம்மந்தர் குரு பூஜைப் பேரணிகளானது, முனைத்தீவிலிருந்தும்   பெரிய போரதீவிலிருந்தும் இன்று ஆரம்பமாகி, கோவில் போரதீவு கண்ணகியம்மன் ஆலயத்தை வந்தடைந்தன.  இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,  'அறநெறிப் பாடசாலைகளின் பணி மென்மேலும் பல மடங்குகள் அதிகரிக்கச் செய்யப்பட வேண்டும்.

'மேலும், இந்து மதத்தைப் பேணிப் பாதுகாப்பதற்குரிய சட்டம் இல்லை. இதன் காரணமாக, மத மாற்றங்கள் இடம்பெறுகின்றன.  தமிழ்ப் பெண்கள் பலர், வறுமை தாங்க முடியாமலும் சீதனக் கொடுமையாலும், கடந்த சில நாட்களுக்குள் ஏனைய மதங்களைத் தழுவிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

'ஏனைய மதங்களைப் பேணிப் பாதுகாப்பதற்கு அம்மதங்களைச் சேர்ந்தோர், பிரதிநிதிகள், மதப்பெரியார்கள், தனவந்தர்கள், கல்விமான்கள் என அனைவரும் ஒன்றிணைந்து, அமைப்புகளை உருவாக்கி வைத்துள்ளனர்.

"ஆனால், எமது இந்துமதத்தைப் பேணிப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .