2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'இடைவிலகளால் துஷ்பிரயோகமும் அதிகம்'

Gavitha   / 2015 நவம்பர் 26 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்களின் இடைவிலகல்கள் காரணமாக சிறுவர்கள் தொடர்பிலான துஸ்பிரயோகங்களும் அதிகரித்துச்செல்வதாக மாவட்ட சிறுவர பாதுகாப்பு நன்னடத்தை திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர வீ.குகதாஸன் தெரிவித்தார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏறாவூரப்பற்று பிரதேச்ச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே அதிகளவான துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பதிவுகள் கிடைத்துள்ளன.

சிறுவர் துஸ்பிரயோகங்கள் நடைபெறும் பகுதி பிரதேச செயலகம் ஊடாக அவை தொடரபில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்று கூறினார்.

'மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிலிருந்து  2012ஆம் ஆண்டு 31 சம்பவங்களும் 2013ஆம் ஆண்டு 44 சம்பவங்களும் 2014ஆம் ஆண்டு 48 சம்பவங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் பாடசாலை இடை விலகல், ஒழுங்கினமாக 68 பிள்ளைகள் இருந்த நிலையில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக 52 பிள்ளைகள் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இது பெரிய ஒரு மாற்றமாகும்' என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், பாடசாலை மாணவர்களின் இடைவிலகளே சிறுவர்கள் துஸ்பிரயோகங்களுக்கு காரணங்களாக அமைகின்றன என்று கூறிய அவர் பாடசாலைக்குச் செல்லாமல் இருக்கும்போது, பல்வேறு வழிகளில் துஸ்பிரயோகத்துக்குட்படும் சந்தரப்பங்கள் ஏற்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .