2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உரமானியம் கிடைக்காமல் ஆயித்தியமலை விவசாயிகள் ஏமாற்றம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

விவசாயிகளின் நலன் கருதி கடந்த மே மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதியால் ஆரம்பித்துவைக்கப்பட்ட உரமானியத் திட்டத்தின் நன்மை கிடைக்காமல் ஆயித்தியமலை விவசாயிகள் சுமார் 1,000 பேர் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என  உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத் தலைவர் கே.யோகவேள் தெரிவித்தார்.

ஒரு ஏக்கர் நெல் விவசாயத்துக்கு 5,000 ரூபாயை அரசாங்கம் உரமானியமாக வழங்குகின்றது. ஆகக்கூடியது விவசாயி ஒருவருக்கு 05 ஏக்கருக்கு மாத்திரமே உரமானியம் வழங்கப்படுகிறது.    

உரமானியம் கிடைக்காத இந்த விவசாயிகளுடனான சந்திப்பு, ஆயித்தியமலை நீர்ப்பாசன அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதன்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டனர் எனவும் அவர் கூறினார்.

ஆயித்தியமலை விவசாய அபிவிருத்தி அலுவலகத்தில் இடம்பெற்ற நிர்வாகத்தவறு காரணமாக இந்த விவசாயிகளுக்கு இதுவரையில் உரமானியம் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் விவசாயத் திணைக்களத்தின்  உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது, உரமானியம் பெற்றுத்தருவது உள்ளிட்ட கோரிக்கைகன் முன்வைக்கப்படும். இக்கோரிக்கைகள்; நிராகரிக்கப்படுமாயின், இப்பிரதேச விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக உள்ளனர்; எனவும் அவர் கூறினார்.

உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபட்ட ஆயித்தியமலை கமநல அபிவிருத்தி அலுவலகத்தின் கீழ் நிர்வகிக்கப்படும்  சுமார் 2,000 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகளுக்கு  இதுவரையில் உரமானியம் கிடைக்கவில்லை.
இதுவரையில் உரமானியம் கிடைக்காத விவசாயிகளுக்கான உரமானியம் இம்மாதம் 15ஆம் திகதிக்குள் வழங்கப்பட்டுவிடும் என மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் கடந்த ஜுலை மாதம் 06ஆம் திகதி தெரிவித்திருந்தார். ஆயினும், அவர் கூறிய காலக்கெடுவும் முடிவடைந்துள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .