2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உறுகாமம் பிரிவு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 5,260 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 04 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு, உறுகாமம் பிரிவு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் இம்முறை 5,260 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு செங்கலடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஆரம்பக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உறுகாமம் பிரிவு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் பாலகன்வெளிக் கண்டத்தில்; 320 ஏக்கரிலும் கூமாச்சோலை கண்டத்தில் 450 ஏக்கரிலும் தொடுவில்சோலை கண்டத்தில் 420 ஏக்கரிலும் சமுளங்குடா கயிறுவெளிக் கண்டத்தில் 565 ஏக்கரிலும்  மயிலவட்டுவான் மாங்களமடு கண்டத்தில் 315 ஏக்கரிலும் நேரக்குடா கண்டத்தில்; 165 ஏக்கரிலும் தம்பானம்வெளிக் கண்டத்தில் 200 ஏக்கரிலும் ஊரருகு வெல்லங்குடா கண்டத்தில் 165 ஏக்கரிலும் பள்ளத்து வெளிக் கண்டத்தில் 645 ஏக்கரிலும்  பெருவெளி கண்டத்தில்; 475 ஏக்கரிலும் சின்னவெளி கண்டத்தில் 350 ஏக்கரிலும் சின்னாளள்வெளி கண்டத்தில் 400 ஏக்கரிலும்  குளத்துவட்டை கண்டத்தில்; 250 ஏக்கரிலும் பாலமடு வடக்கு கண்டத்தில் 290 ஏக்கரிலும் பாலாமடு தெற்கு கண்டத்தில் 250 ஏக்கரிலும் சிறுபோகம்  பண்ணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
கித்துள்வௌ குளத்தின் மூலம் 470 ஏக்கரிலும் வெலிக்காகண்டிய குளம் மூலம் 339 ஏக்கரிலும் சிறிய நீர்ப்பாசன குளங்களின் பாசன வசதியுடன் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் 05ஆம் திகதி விவசாய வேலைகளை ஆரம்பிப்பதற்கும்  எதிர்வரும் 25ஆம் திகதி  விதைப்பு வேலையை ஆரம்பிப்பதற்கும்  மூன்று அல்லது மூன்றரை மாத நெல்லினம் பயன்படுத்தப்பட வேண்டும். சித்திரை 15ஆம் திகதி விதைப்பு முடிவுத் திகதி எனவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .