2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

'உலகில் 70 சதவீதமான மரணங்கள் நான்கு நோய்களினால் ஏற்படுகின்றன'

Thipaan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

உலகில் 70 சதவீதமான மரணங்கள் நான்கு வகையான நோய்களினால் ஏற்படுவதாக டாக்டர் ஆர்.நவலோஜிதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்களை கௌரவிக்கும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை  (28)மாலை நடைபெற்றது.

அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக தலைவர் பி.சடேச்சரராஜா  தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தொடர்ந்துரையாற்றிய அவர்

இன்று உலகில் 70 வீதமான மரணங்கள் நான்கு வகையான நோய்களினால் ஏற்படுகின்றன.

அதில் இருதய நோய் மற்றும் புற்றுநோய், நீரிழிவு நோய், சுவாசப்பை நோய் ஆகிய நோய்களினால் இந்த 70 வீதமான மரணங்கள் ஏற்படுகின்றன.

இந்த நோய்கள் ஏற்படுவதற்கு அடிப்படையான நான்கு காரணிகள் உண்டு. சாப்பாட்டு பழக்கவழக்கம், உடற்பயிற்சையின்மை, மதுபாவனை மற்றும் புகைத்தல் ஆகிய நான்கு காரணிகளால் இவ்வாறான நோய்கள் ஏற்படுகின்றன.

நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நோய் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. பலர் நோயுடன் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு நோயுண்டு என்பதை அதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன்தான் வைத்தியரை நாடுகின்றனர்.நோய் வராமல் தடுக்கின்ற முறையினை நாம் பின்னபற்ற வேண்டும்.

சுகாதார தொழிலாளர்கள் செய்யும் பணி மகத்தானது. அவர்கள் சுத்திகரிப்பாளர்கள் என ஒதுக்கி விடக் கூடாது. நாமும் சுத்திகரிப்பாளர்கள்தான். நமது வீட்டை நமது சூழலை சுத்தம் செய்கின்றோம்.

எனவே, மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் சுகாதார தொழிலாளர்களின் பணி மகத்தானது அவர்களை கௌரவிக்கும் இந்த வைபவம் சிறப்பானது என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .