2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஏறாவூரில் மினி ஆடைத் தொழிற்சாலை திறந்து வைப்பு

Niroshini   / 2017 மே 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன், ஏறாவூரில் அமைக்கப்படடுள்ள மினி ஆடைத் தொழிற்சாலை, நேற்று மாலை பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலியினால் திறந்துவைக்கப்பட்டது.

ஏறாவூர் - புன்னைக்குடா வீதியில் அமைந்துள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கக் கட்டடத் தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த மினி ஆடைத் தொழிற்சாலையில் 20 பெண்கள் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளார்கள்.

ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப்  தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. கனகசுந்தரம், ஏறாவூர் நகர பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் கே. சிவலிங்கம், பிளான் இன்ரநேஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் கிழக்குப் பிராந்தியப் பணிப்பாளர் டேவிட் சதானந்தன், சர்வோதய நிறுவனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் உள்ளிட்டோர்  பலர்  கலந்துகொண்டனர்.

இந்த மினி ஆடைத் தொழிற்சாலையை உருவாக்குதற்குத் தேவையான உபகரணத் தொகுதிகளுக்காக கிராமிய பொருளாதார அமைச்சு 17 இலட்ச ரூபாயை வழங்கியுள்ள அதேவேளை ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 10 இலட்ச ரூபாயையும் வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு நிபுணத்துவ தொழில் வாண்மைப் பயிற்சிகளை வழங்குவதற்காக பிளான் இன்ரநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வழங்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X