2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஒப்பந்தங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது ஜனநாயக ரீதியானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும். ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை தவிர்த்து தமது அரசியல் நோக்கத்துக்காக அவசரமாக எக்டா ஒப்பந்தத்தை செய்ய முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று பிற்பகல் நடாத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்வைத்தியர்கள் சங்கத்துடன் இணைந்து இரண்டு விடயங்களுக்கான இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது. முதலாவது இலங்கை இந்தியாவுக்கு இடையில் செய்யப்படவுள்ள எக்டா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்துவருகின்றோம். சீபா என்ற ஒப்பந்தம் முதல் இதனை நாங்கள் எதிர்த்துவருகின்றோம்.

இது ஜனநாயக ரீதியாக செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் அல்ல. இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு ஒரு பாதிப்பான விடயமாகவே அமையும். இந்த ஒப்பந்தங்களை நாங்கள் முற்றாக எதிர்க்கவில்லை.ஒரு தேசிய ரீதியான கொள்கையை வகுத்து அந்த கொள்கைகள் ஊடாக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது, ஜனநாயக ரீதியானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும். தற்போதைய அரசாங்கம் அதனை தவிர்த்து தமது அரசியல் நோக்கத்துக்காக அவசரமாக இந்த ஒப்பந்தத்தை செய்ய முயற்சிக்கின்றனர்.

ஆகவே, முழுமையாக இந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஏனைய வைத்திய சங்கங்களும் இணைந்து இந்த ஒப்பந்தத்தை அவசரம் கொண்டு செய்ய வேண்டாம். தேசிய கொள்கையை வகுத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .