2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கட்டடங்களை அகற்றும் பணிகள்

வா.கிருஸ்ணா   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாநகரசபையின் அனுமதியின்றி, மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றும் பணிகள், இன்று (07) முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் மட்டக்களப்பு பொலிஸாரின் உதவியுடன், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு நகரில், முனை வீதியில் அனுமதியின்றிக் கட்டப்பட்டிருந்த வர்த்தக நிலையமொன்றின் அனுமதியற்ற பகுதிகள் அகற்றும் நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

குறித்த வர்த்தக நிலையத்தில் மாநகர சபையின் அனுமதிபெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு, மட்டக்களப்பு மாநகர சபையால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதற்கு அமைய குறித்த கட்டட பகுதிகளை அகற்றுவதற்கு, நீதவான் நீதிமன்றம் வழங்கியது.

இருந்தபோதிலும், அந்தக் கட்டட உரிமையாளருக்கு மேன்முறையீடு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் மேற்படிக் கட்டடத்தின் பகுதிகளை அகற்றுமாறு, மாநகரசபையால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் கடந்தவாரம் இதற்கான இறுதி அறிவித்தல் வழங்கப்பட்டு, குறித்த பகுதிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைககள், மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டதாக, மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .