2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘கிழக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது’

வா.கிருஸ்ணா   / 2020 ஜனவரி 06 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ்த் தலைமைகளால், கிழக்குத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதை இனியும் அனுமதிக்கமுடியாதென, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கூட்டு சனநாயகப் பணிக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு, அதன் தலைவர் தலைமையில், மட்டக்களப்பில் இன்று (06)  நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தற்போதைய அரசியல் நிலைமைகள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, கிழக்கில் ஒரு பொதுச் சின்னத்தில் களமிறக்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இங்கு தொடர்ந்து கருத்துத்ரைத்த கோபாலகிருஸ்ணன், வடகிழக்கு இணைந்த தீர்வுத்திட்டம், 13ஆவது அரசமைப்பை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பதே தமது முழுமையான நோக்கம் என்றார்.

மக்களுக்கான அரசியல் என்பது உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் வெளிப்படைத்தன்மையானதாகவும் இருக்கவேண்டுமெனக் கூறிய அவர், கிழக்கு மாகாணத்தைக் காப்பாற்றவேண்டிய தேவை உள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு, ஒரு தந்திரோபாய அணுகுமுறையே தவிர, இது எவருக்கும் எதிரான அமைப்பு இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .