2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கழிவு மேலான்மை முகாமைத்துவ கலந்துரையாடல்

வா.கிருஸ்ணா   / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கழிவு மேலான்மை முகாமைத்துவத்தின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்ளுதல், தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பிலான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று (12) நடைபெற்றது.

மேற்படிக் கலந்துரையாடலில், தற்கால நகர மயமாக்கலின் காரணமாக சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.

குறிப்பாக, மீள்பயன்பாடு, மீள்சுழற்சி கழிவு மேலாண்மை வியூகத்தில் ஐரோப்பிய ஒன்றியம், யு.எஸ்.எயிட் நிறுவனங்களின் நிதி அனுசரணையிலும், தனியார் துறைசார் முதலீடுகளின் ஊடாகவும் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள செயற்றிட்டங்கள் தொடர்பிலும் அதன் ஊடாக இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் தொடர்பிலும், இங்கு ஆராயப்பட்டன.

மேற்படிக் கலந்துரையாடலில் பயோ-பவர் நிறுவனத்தின் பணிப்பாளர் கத்தறின் செச்சிலிங், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி மேயர் க.சத்தியசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், விவசாயத் திணைக்களம், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், சிவில் சமுக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .