2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கே அதிக உதவிகள் வழங்கப்படுகின்றன

Niroshini   / 2016 மே 17 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பலர் புலம்பெயர்ந்த நிலையில் உள்ளபோதிலும், அவர்கள் தங்கள் குடும்பம் என்ற நிலையிலேயே வாழ்கின்றனர். ஆனால், வட பகுதியை சேர்ந்தவர்களே கிழக்கு மாகாணத்துக்கு அதிக உதவிகளை வழங்கி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாவிலங்குதுறையில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“எங்களது நாட்டில் இருந்து பலர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். புலம்பெயர்ந்த மக்கள் அனுப்பும் உதவிகளில் கிழக்கு மாகாணத்துக்குக் கிடைக்கும் உதவிகளில் பெரும்பாலானவை வட பகுதியை சேர்ந்தவர்களினால் அனுப்பப்படும் உதவிகளே கிடைக்கின்றன.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து புலம்பெயர்ந்து சென்றவர்கள் பலர் தாங்களும் தங்கள் குடும்பமும் என்ற ரீதியிலேயே வாழ்ந்துகொண்டுள்ளார்களே தவிர ஒரு சிலரே எமது மக்களின் நிலையை உணர்ந்து உதவிகளை வழங்கிவருகின்றனர்.

அந்தவகையில், தனலக்ஸ்மி அவர்கள் மண் உணர்வும் தமிழ் உணர்வு அதிகமான நிலையில் இருந்து வட, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு உதவிகளை தங்கள் சொந்தப்பணித்தில் இருந்து வழங்கிவருகின்றார்.

எமது எல்லைக்கிராமங்களில் ஊடுறுவல்கள் இடம்பெற்றுவருகின்றன. அவற்றை பாதுகாக்கவேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. இப்பகுதியில் உள்ள மாணவர்கள் தங்களது கல்வி நிலையை உயர்த்தும்போதே எல்லைகள் பாதுகாக்கும் நிலையேற்படும்.

இப்பிரதேசத்தில் உள்ள மாணவர்கள் கல்வியை இடைநடுவில் விட்டுவிட்டு அயல் கிராமங்களுக்கு வீட்டு வேலைகளுக்கு செல்வதாக அறியமுடிகின்றது. அவ்வாறு யாரும் கற்கும் வயதில் வீட்டு வேலைக்கு செல்வார்களானால் அவர்களையும் அவர்களின் பெற்றோரையும் கைதுசெய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .