2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’சகல தரப்பினரதும் விவரங்களை வெளியிடுக’

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஹஸ்பர் ஏ ஹலீம், எப்.முபாரக்

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கேற்கும் சகல தரப்பினரதும் விவரங்களை வெளியிடுமாறு, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிகாரவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.டி. கொடிகாரவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது” என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சுற்று நிருபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்ட சகல தரப்பினரதும் விவரங்களைத் தெளிவாக குறிப்பிடவேண்டும்.

பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் உள்ளுராட்சிமன்றப் பிரதிநிதிகள் கலந்து கொள்வது சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் சில நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சர்வமதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதி அல்லாத வேறு தரப்பினர், உள்ளுராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யாத கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என வேறு பல தரப்பினர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

இதனால், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பல சிக்கல்கள் உருவாகியுள்ளதுடன், தேவையற்ற விதத்தில் காலமும் - நேரமும் வீணடிக்கப்படுவதால், தேவையான முக்கிய விடயங்களைக் கலந்துரையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .