2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சமூக அமைதியின்மை மட்டக்களப்பில் வலுக்கும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 மார்ச் 10 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் இலகுவில் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடிய  மாவட்டமாக மட்டக்களப்பு அடையாளம் காணப்பட்டுள்ள விடயம் கவலையளிப்பதாக, சட்டத்தரணியும் மட்டக்களப்பு மாவட்டச் செயலக கலாசாரத் திணைக்கள அதிகாரியுமான பீ.எம்.எம். பிறோஸ் நழீமி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதச் செயற்குழுவின் செயற்பாடுகள் பற்றிய அமர்வு, மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் இன்று (10)  நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதச் செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மூவின சமூகங்களைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டாளர்கள்  கலந்துகொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “மட்டக்களப்பு மாவட்டம்  பல்லின மக்கள் வாழும் பிரதேசமாக இருக்கின்ற அதேவேளை, பல சமயங்கள் பல கலாசார விழுமியங்கள் பன் மொழிகள் அங்கே இருக்கின்றன.

“இவ்வாறெல்லாம் இருந்தும் இந்தப் பிரதேசத்து மக்களிடையே புரிந்துணர்வு இல்லை என்பது ஆய்வுகள் தெரியப்படுத்தும் உண்மையாகும்” என்றார்.

புரிந்துணர்வின்மை காரணமாக பல இழப்புகளை நாம் சந்தித்துள்ளோம் என்றும்  தனிப்பட்ட விவகாரஙகள், முரண்பாடுகள் கூட சமூகப் பிரச்சினையாகவும் இனப்பிரச்சினையாகவும் உருவாக்கப்படுவதை நாம் கண் கூடாகக் கண்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

“எனவே, சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை காரணாக, நாம் தொடர்ந்தும் இழப்புகளைச் சந்திக்கப் போகின்றோமா, நமது எதிர்காலச் சந்திதியினரையும் அமைதின்மைக்குள் விட்டு வைக்கப் போகின்றோமா என்பதையிட்டு, அதீத அக்கறை எடுக்க வேண்டும்” என்றும் அவர் வலியுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .