2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிரிவு அளப்பரிய சேவை செய்கிறது'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிரிவு மக்களுக்கு அளப்பரிய சேவையை ஆற்றிவருகின்றது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா  தெரிவித்தார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கீழ் இயங்கும் சமுதாயஞ்சார் சீர்திருத்தப் பிராந்திய காரியாலயத்தினதும் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தினதும் 'மதுவை ஒழித்து வாழ்க்கையை வெற்றி கொள்வோம்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வு, கல்லடி விமோச்சனா இல்லத்தில் சனிக்கிழமை (16) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'மதுபானத்துக்கு அடிமையாகி, குடும்பத்தில் முரண்பட்டு, வாழ்க்கையைச் சீரழித்து நீதிமன்ற வழக்குகளுக்கு முகங்கொடுத்து வருபவர்களை விமோச்சனா இல்லத்துக்கு சீர்திருத்தத்துக்காக நாம் அனுப்புகின்றோம். அதன் பயனாக அவர்கள் மதுபானத்துக்கு அடிமையாவதிலிருந்தும் பிறழ்வான நடத்தைகளிலிருந்தும் விலகி தங்களின் குடும்பத்துக்கும் நாட்டுக்கும் பிரயோசனமுள்ள பிரஜைகளாக மாறிவருகிறார்கள். பலர் இத்தகைய சீர்திருத்தப்பணி மூலம் பயன்பெற்றுள்ளார்கள்' என்றார்.  

'நீதிமன்றத்தின் பணி எப்பொழுதும் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே இடம்பெறுகின்றது.
சிறுகுற்றவாளிகளை சிறையில் இடும்போது, சில சமயங்களில் அங்குள்ள பெரும் குற்றவாளிகளுடன் அவர்கள் பரஸ்பரமாகப் பழகி பெரும் குற்றம் இழைக்கவும் வழியேற்படும் என்பதால், சிறுகுற்றவாளிகளை நாம் முதலில் சீர்திருத்தம் செய்யும் இடங்களுக்கு அனுப்புகின்றோம். இதனால்,  சீர்திருத்த சேவை மக்களுக்கு மிகப் பயன் உள்ளதாக அமைந்துள்ளது' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X