2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சுற்றுலா மேம்படுத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

திறன் அபிவிருத்தி அமைச்சின் அங்கிகாரத்தில்,  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்வாங்கப்பட்ட  வளர்ச்சிக்கான திறன் அபிவிருத்திச் செயத்திட்டனுடாக, சுற்றுலாத்துறையையும் கலை, கலாசாரத்தையும் மேம்படுத்துவதற்கான திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அவுஸ்ரேலியா நாட்டின் உதவியில் அமுல்படுத்தப்படவுள்ளஇந்த விசேட திட்டம் பற்றி ஆராய்வு செய்யும்  கூட்டம்,  மாவட்டச் செயலாளர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று  (06) நடைபெற்றது.

இத்திட்டம், சுற்றுலாத்துறையை வளர்க்கவும் சுற்றுலாத் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டமாக அமுல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டனுடாக, சுற்றுலாத்துறையுடான தொழில் வாய்ப்புகள்,  நாட்டின் கலை, கலாசாரங்களை வளர்ச்சியடையச் செய்யவும் இளைஞர், யுவதிகளின் திறன் விருத்தி செய்யப்பட்டு, தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்படவும் நாட்டினுடைய வருமானம் உயர்வடையும் நிலை ஏற்படுமென மாவட்டச் செயலாளர், இங்கு கருத்துத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.ஸ்ரீகாந்த் , மாவட்ட பிரதம கணக்காளர் கே.ஜேகதீஸ்வரன் ,உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் புண்ணியமூர்த்தி சசிகலா ,சிறு தொழில்  முயற்சி அபிவிருத்திப்பிரிவின் திணைக்கள தலைமை உத்தியோகத்தர் எஸ்.வினோத் ,  உள்வாங்கப்பட்ட திறன் அபிவிருத்தி செயத்திட்ட நிறுவனத்தின்  மாவட்ட முகாமையாளர்  ஜி.மெரினா,திட்டத்தின் ஆலோசகர் பேராசிரியர் சந்திராஸ்ரீ மற்றும் திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X