2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுழல் காற்றினால் மட்டக்களப்பில் ஆங்காங்கே சேதம்

Suganthini Ratnam   / 2017 மே 25 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வ.துசாந்தன்  

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை (24)  பிற்பகல் வேளையில் மழையுடன் கூடிய சுழல் காற்று வீசியதால், ஆங்காங்கே சிற்சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

நீண்ட வரட்சிக்குப் பின்னர் சில மணிநேரங்கள் இம்மாவட்டத்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.  

மழையுடன் கூடிய சுழல் காற்றினால் குடிசைகள், கட்டடங்கள், வலைகள், தோணிகள் ஆகியவற்றுக்குச் சிறிதளவான சேதம் ஏற்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் கேட்போர் கூட நுழைவாயில் கதவு பொருத்துகளுடன் பெயர்த்தெடுக்கப்பட்டு நொருங்கியுள்ளது. அத்துடன், பிரதேச செயலகத்தின் பதிவாளர் அலுவலகப் பிரிவுக் கதவும் உடைந்து விழுந்துள்ளது என அப்பிரதேச செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை, மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விடுதிக்கல் கிராமத்திலுள்ள வீடொன்றின் கூரை சுழல் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது.

மேலும் ஏறாவூர் புன்னைக்குடா, களுவன்கேணி,  சவுக்கடி கடற்கரையோரங்களில் அமைக்கப்பட்டிருந்த மீன் வாடிகளும், குடிசைகள் சிலவும் சுழல் காற்றினால் சேதமடைந்துள்ளன.

தமது மீன்பிடிக் கட்டு வலைகள் சுழல் காற்றின்  நீர்ச்சுழற்சியினால் முறுக்கப்பட்டு, திரிபட்டு சேதமடைந்துள்ளன என மீனவர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .