2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'சுகாதாரம் தொடர்பான சவாலை கிழக்கு மாகாணம் எதிர்நோக்கியுள்ளது'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணமானது சுகாதாரம் சம்பந்தப்பட்ட சவாலை எதிர்நோக்கியுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

தற்போது இம்மாகாணத்தில் வாய்ப்புற்று நோய், நீரிழிவு, டெங்கு என்பன சவாலாக உருவெடுத்துள்ளன என்பதுடன், இம்மாகாணத்தில் வாய்ப்புற்று நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சுமார் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கிச் சாதனங்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு இன்று (27) கையளிக்கப்பட்டன. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதேபோன்று, வீட்டுக்கு வீடு நீரிழிவு நோயாளர்கள்  உள்ளார்கள் என்பதும் அதிர்ச்சி அளிக்கின்றது. எனவே, சுகாதாரத் துறையில் கிழக்கு மாகாணம் எதிர்நோக்கியுள்ள சவாலை முறியடிப்பதில் எல்லோரும் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .