2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தரமான மருந்துப்பொருட்களை வழங்க கட்டுப்பாட்டு அதிகார சபை அமைக்கப்பட்டுள்ளது

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பேரின்பராஜா சபேஷ்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க ஆகியோரின் தலைமையிலான தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு தரமான மருந்துப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கட்டுப்பாட்டு அதிகார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறைப் பிரதியமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

“அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மருந்துப்பாதுகாப்பு மற்றும் மேற்பார்வை முகாமைத்துவமும்” என்ற தொனிப்பொருளில் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் இலங்கையின் சார்பில் சுகாதாரத்துறைப் பிரதியமைச்சர் பைசல் காசிம் பங்கேற்றுள்ளார்.

கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான இம்மாநாடு, ஓகஸ்ட் 02ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சீன அரசாங்கத்தின் ஏற்பாட்டில்  நடைபெறும் இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

சுகாதாரத்துறைப் பிரதியமைச்சர் பைசல் காசிம் வியாழக்கிழமை (28) விஷேட உரை நிகழத்துகையிலெயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க ஆகியோரின் தலைமையிலான தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் மக்களுக்கு தரமான மருந்துப்பொருட்களை வழங்கும் நோக்குடன் கட்டுப்பாட்டு அதிகார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தலைமையிலான அதிகாரிகள் இதனை அவதானத்துடன் கண்காணித்துவருகின்றனர்.

அந்தவகையில் தெற்காசிய நாடுகளிடையே சுகாதாரத்துறையில் ஒரு முன்மாதிரியான நாடாக இலங்கை திகழ்கிறது. குறிப்பாக மருத்துவத்துவ பொருள் உற்பத்தியில் சீனாவின் முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பினை இலங்கை பெரும் வரவேற்புடன் எதிர்பார்ப்பதாகவும் இத்துறையில் சீனா கடந்தகாலங்களில் செய்துள்ள உதவிகளை நன்றியுடன் நினைவுகூருவதாகவும் பிரதியமைச்சர் பைசல் காசிம் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X