2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘நம்பிக்கை கேள்விக்குறியாக உள்ளது’

Niroshini   / 2017 மே 20 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நல்லாட்சி அரசாங்கத்தில் சிறுபான்மை சமூகம் வைத்த நம்பிக்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளதாகவும் நம்பிக்கையிழந்த நிலையில் சிறுபான்மை சமூகம் உள்ளதாகவும், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

உச்சக்கட்ட அதிகார பகிர்வை இரண்டு சமூகங்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் ஒன்றுபட்டு செயற்படவேண்டிய தேவையுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஆரையம்பதியில் அமைக்கப்பட்டுள்ள பொதுநூலகம் திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டபோது நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம். நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு ஒரு ஆண்டுக்குள் சரியான தீர்வுத்திட்டம் வரும் என்று எதிர்பார்த்து நின்றோம். ஆனால், சிறுபான்மை சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

ஏமாற்றப்பட்டது மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கு முன்பிருந்த நம்பிக்கைகூட இழந்துவிட்டது. இனப் பிரச்சினைக்கான தீர்வுக்காக உண்மையான அதிகாரப்பகிர்வு வருமா என்பது இன்று கேள்விக்குறியாகவுள்ளது.

முன்பிருந்த அரசாங்கத்தில் எல்லா விடயங்களும் எவ்வாறு கேள்விக்குறியானதாக இருந்ததோ அதே நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கும் நிலையேற்பட்டுள்ளது. அவற்றினை நிவர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இருக்கின்றது.

நாங்கள் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த நிலையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற யதார்த்தத்தை நாங்கள் புரிந்துவைத்துள்ளோம்.

விட்டுக்கொடுப்புகளை செய்து அதியுட்ச அதிகாரப் பகிர்வைபெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அதில் நம்பிக்கை கொண்டு செயற்படுவதற்கான முடிவினை அரசியல் தலைவர்கள் எடுத்துள்ளார்கள்.

அதியுட்ச அதிகாரப்பகிர்வை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு இனங்களும் ஒற்றுமையாக செயற்படவேண்டிய தேவையுள்ளது. அவ்வாறு செயற்படும்போது உச்சபட்ச அதிகார பகிர்வினைப் பெறமுடியும்.

அதனைப் பெற்று இரண்டு சமூகங்களும் விட்டுக்கொடுப்புகளைச் செய்து அதனை பகிர்ந்துகொள்வதில் எந்த முரண்பாடுகளும் எங்களுக்குள் வராது என நாங்கள் நம்புகின்றோம்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .