2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

'நிலைத்து நிற்கக்கூடிய தீர்வுத்திட்டம் புதிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
நிலைத்து நிற்கக்கூடிய வகையிலான தீர்வுத்திட்டம் புதிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
 
வேப்பவட்டுவான் - களுங்குளாமடுவில் சனிக்கிழமை (17) மாலை விவசாயிகள்; மற்றும் பண்ணையாளர்களுடனான சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஒற்றையாட்சியின் கீழ் நாம் ஆளப்பட்டுள்ளோம். இதன் மூலம் நாட்டையும் அபிவிருத்தி செய்யவில்லை. மக்களையும் ஒற்றுமைப்படுத்த முடியவில்லை. சர்வதேச நாடுகளின் மத்தியிலும் நாட்டுக்குக் கௌரவம் கிடைக்கவில்லை. ஒற்றையாட்சி முறையைத் தோல்வி அடைந்த ஒரு முறையாகவே நான் கருதுகின்றேன்' என்றார்.  
 
'எமது பிரதேச வளங்களை நாமே ஆளக்கூடிய வகையிலும் இணைந்த வடகிழக்கில் தமிழ் பேசும் சமூகங்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய வகையிலுமான நிலைமையை உருவாக்குவதற்காக எமது தலைமைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன.
 
எமக்கான அபிவிருத்திகளை கொழும்பிலிருந்து கொண்டு வராமல், எமது பிரதேச அபிவிருத்திகளை இங்கேயே திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
 
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் எமக்கு வேண்டும் என்பதுடன்,  வெளிநாடுகளிலிருந்து நேரடியாக நிதியைப் பெற்று எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யக்கூடிய அதிகாரம்; எமக்கு வழங்கப்பட வேண்டும்.

தமிழ், முஸ்லிம் இனங்கள் சமத்துவத்துடன் வாழும் நிலைமை உருவாக வேண்டும் என்ற வகையிலான தீர்வுத்திட்டத்தை நாம்; வலியுறுத்தி வருகின்றோம்.
 
ஆனால், ஒற்றையாட்சித் சிந்தனையில் ஆளும் கட்சியினர்; இருப்பதுடன், பௌத்த மதத்தை முதன்மைப்படுத்துகின்றார்கள். எல்லா மதங்களுக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அல்லது மதச் சார்பற்ற நாடாக இலங்கை இருக்க வேண்டும்.
 
புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பானது, சகல மதங்களையும் மதிக்கக்கூடிய வகையில் திறமை உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைய வேண்டும்' எனவும் அவர் கூறினார்.
 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X