2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நெல்லை உலர்த்துவதற்கான வசதியை ஏற்படுத்தித் தரவும்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 28 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை வீதியில் உலர்த்துவதால், விபத்துகள் ஏற்படும் நிலைமை காணப்படுவதாகவும் இருந்தபோதிலும், வேறுவழியின்றி தாங்கள் வீதியிலேயே நெல்லை உலர்த்த வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆகவே, நெல்லை உலர்த்துவதற்கான இடவசதியை  ஏற்படுத்தித் தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது இப்பிரதேசத்தில் சிறுபோக நெல் அறுவடை இடம்பெறுகின்றது. அறுவடை செய்யும்; நெல்லை வவுணதீவு -ஆயித்தியமலை பிரதான வீதி மற்றும் உன்னிச்சை -மட்டக்களப்பு பிரதான வீதிகளின் ஒருபகுதியில்  பரப்பி விவசாயிகள்  உலர்த்துகின்றனர். இதனால், விவசாயிகளும் வீதியில் போக்குவரத்துச் செய்வோரும் பாரிய சிரமத்தை  எதிர்நோக்குவதாகவும் அவர்கள் கூறினர்.

அறுவடைக்காலத்தில் நெல்லின் விலை  வீழ்ச்சியடைவதால், நெல்லை உலர்த்தி விவசாயிகள் சேமித்துவைத்து, நெல்லின் விலை அதிகரிக்கும்போது நெல்லை விற்பனை செய்கின்றனர். அத்துடன், உலர்த்தப்பட்ட நெல்லை விதை நெல்லாகவும் பயன்படுத்துவதற்கு விவசாயிகள் களஞ்சியப்படுத்துகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .