2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘பெண்கள் விடுதலை அடைய வேண்டும்’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பெண்கள், இவ்வாண்டு விடுதலை அடைய வேண்டுமென ஆதங்கம் கொள்வதாக, அவுஸ்திரேலிய உள்வாங்கலுடனான திறன் அபிவிருத்திச் செயற்றிட்டத்தின் அணித் தலைவர் டேவிட் அப்லெற் தெரிவித்தார்.

மட்டக்களப்பு – தன்னாமுனை, மியானி கேட்போர் கூடத்தில் இன்று (08) நடைபெற்ற சர்வதேச மகளீர் தினத்தையொட்டிய நிகழ்வில், அவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இலங்கை திறன் அபிவிருத்தி அமைச்சினூடாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் திட்டங்களில் பங்கு பற்றிய சாதனைப் பெண்கள், இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களது வெற்றிக் கதை அனுபவங்களும் பகிரப்பட்டன.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய டேவிட் அப்லெற், “உலக நாடுகள் பல்வேறு முன்னேற்றங்களை அமைந்துக் கொண்டிருந்தாலும் பாரம்பரிய மதம், கலாசாரம், பண்பாடுகள் ஊடாக பெண்கள் இன்னமும் அபிவிருத்தி அடையாமலும் விடுதலை அடையாமலும் இருந்து வருகின்றார்கள்.

“பெண்கள் முன்னேற்றமடைவதற்கு அவர்கள் சார்பில் உடைத்தெறியப்படவேண்டிய பல்வேறு தடைகள் இன்னமும் உள்ளன.

“இந்த விடயங்களில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இந்த வேளையில், பெண்கள் சார்பாக முக்கியத்துவமளித்து அபிவிருத்தியின் இலக்கை எட்டுவதற்கு ஏற்ற, இயங்கியல் பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .