2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொதுஜன பெரமுன இனவாதக் கட்சியல்ல

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

 பொது ஜன பெரமுன  கட்சி ஒரு இனவாதக் கட்சியல்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற கட்சியாகுமென ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ  வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (18)  காலை களுதாவளை யில் அமைந்துள்ள அவரைது இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.....

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சில கட்சிகளின் இனவாதத்தினால் தான், எமது கட்சிக்கு இம்மாவட்ட த்தில் எதிர்பார்த்த அளவு வாக்குகள் கிடைத்திருக்க வில்லை.    இருந்த போதிலும் கோட்டாபய அமோக வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல அபிவிருத்திகளும் நடைபெறும்.   

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில்  ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு  வாக்களித்த அனைத்து மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் பொதுஜன பெரமுன  கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X