2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பலத்த மழையால் போக்குவரத்துத் தடை

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தாழ்நில பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன்,  வீதிகள் ஊடான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன.

குறித்த பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  மாவடிமுன்மாரி வீதி, வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நாற்பதுவட்டை,  மாவடிமுன்மாரி பகுதிகளுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. இதனால் இன்றைய தினம் பாடசாலைக்கு செல்ல முடியாது மாணவர்கள் பலர் திரும்பிச் சென்றனர்.

மேலும், குழுவினமடு வீதியின் ஊடாக வெள்ள நீர் பாய்ந்து கொண்டிருந்தமையால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்திலும் இன்று சிரமம் ஏற்பட்டிருந்தது.

மண்முனை மேற்கு செயலக பிரிவுக்குட்பட்ட சாமந்தியாறு பாலத்துக்கு முன்  உள்ள வீதி உடைந்து, வெள்ள நீர் பாய்ந்தமையால்  உப்புக்குளம்,  சில்லிக்கொடியாறு,  பன்சேனை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (26) காலை நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 127.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .