2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’பேஸ்புக்கில் பெண்களை அவமானப்படுத்துவது வன்முறையாகும்’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 மே 25 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பேஸ்புக்கில் பெண்களை அவமானப்படுத்துவது, பெண்களுக்கு எதிரான வன்முறையாகும் என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

போரதீவுப்பற்றுப் பிரதேச அபிவிருத்தி புனர்வாழ்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் நடராஜா மோகனதாஸ் தலைமையில் கிராம மட்ட சங்கத் தலைவிகளுக்கான செயலமர்வு, வெல்லாவெளி கோட்டக் கல்வி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வளவாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறினார்.  

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,'பெண்களுக்கு எதிரான வன்முறைககளில் குடும்ப வன்முறையானது சிக்கலான பிரச்சினையாக எமது பிரதேசத்தில் இருந்து வருவதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது.

'தனி நபர் உறவு நிலை மற்றும் சமூக, கலாசார மட்டங்களில் இதற்குப் பங்களிப்புச் செய்கின்ற பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். இதில் பேஸ்புக்கில் பெண்களை அவமானப்படுத்துவதும் குடும்ப வன்முறைக்கான வழிமுறையாகும்

'வன்முறைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு சிவில் சட்டத்தின்படி பொலிஸ் நிலையத்தை நாட வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். பொலிஸ் நிலையத்தில் தனக்கு நேர்ந்த வன்முறைச் சம்பவம் பற்றி விவரித்துக் கூறுவதில் பெண்கள் பெரிதும் சிரமப்படுவதுடன், இவ்வேளைகளில் அநேகமான பெண்கள் பதற்றம் அடைகின்றனர்.

அவ்வாறான சூழ்நிலையின்போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொறுமையை இழந்து குறித்த விடயத்தில் ஆர்வமற்று தமக்கு இகழ்ச்சி ஏற்படுவதாக எண்ணி கடும் போக்கைக் கையாள முயலுகின்றனர். எனவே, இவ்வாறான சூழ்நிலையின்போது, பெண்களை மரியாதையுடன் நடத்தவும் அவர்களின் பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு துரித நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம்; இருக்கின்றது. பெண்கள் எந்தவித பாராபட்சமுமின்றி நடத்தப்பட வேண்டும் என்பதுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடிப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

'பெண்களுக்கு எதிரான வன்முறையானது குடும்பத்துக்குள்,  சமூகத்துக்குள் அல்லது நாட்டுக்குள் மாத்திரமல்ல, அதற்கும் அப்பால் தேசிய எல்லைகளைக் கடந்தும் அது விரிவடைந்து செல்கின்றது' என்றார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .