2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புணாணை மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 27 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, எல்லைக் கிராமங்களான புணாணை மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு நேற்று  வியாழக்கிழமை  சென்ற  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினர்
 
மீள்குடியேறிய தங்களுக்கு இதுவரையில்  அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினரிடம்  அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
 
புணாணை மேற்கிலுள்ள முள்ளிவட்டவான், பொத்தானைப்பாலம்  ஆகிய கிராமங்களிலிருந்து  யுத்த சூழல் காரணமாக  1985ஆம் 1990ஆம் 1995ஆம் ஆண்டுகளில் வெளியேறிய 150 க்கும்  மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களும் சில முஸ்லிம் குடும்பங்களும் தங்கள் இருப்பிடங்களில் மீள்குடியேற ஆரம்பித்துள்ளனர். கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் 32 தமிழ்க் குடும்பங்களும் 32 முஸ்லிம் குடும்பங்களும் முதற்தடவையாக மீள்குடியேற அனுமதிக்கப்பட்டது. இதன்போது,  8 சீமெந்து பக்கெட்டுகளும் 12 கூரைத்தகரங்களும் வழங்கப்பட்டன.
 
இருப்பினும், தங்களுக்கு வீடு, குடிநீர் உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென அக்கிராம மக்கள் கூறினர்.

மேலும், சிலர் அத்துமீறிக் காணிகளை பிடிப்பதும் இம்மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,  'இவ்விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சரின்  கவனத்துக்கு கொண்டுவருவதுடன், இம்மக்களுக்கு வீடு உட்பட வசதிகளை விரைவாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.  ஆனால், மீள்குடியேற்றம் என்ற வகையில் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டை மேற்கொண்டாலும், அனுமதிக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

புணாணை கிழக்கில் ஐந்து பெரும்பான்மையினக் குடும்பங்கள்; வசித்த நிலையில், தற்போது 29 பெரும்பான்மையினக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .