2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கான பொறிமுறைகள் மூடப்பட்டுள்ளன'

Suganthini Ratnam   / 2016 ஜூலை 18 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

பாதிக்கப்பட்ட மக்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்காக இருந்த அனைத்துப் பொறிமுறைகளையும்; இந்த நல்லாட்சி அரசாங்கம் மூடிவிட்டுள்ளதாக சிவில் பிரஜைகள் சபையின் மட்டக்களப்பு மாவட்;டத் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான பொறிமுறைகளை அரசாங்கம் கொண்டிருந்தது.  

நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக்கான மாவட்டச் செயலகத்துக்கு ஊடாகவே புனர்வாழ்வு, புனரமைப்புக்கான இழப்பீடுகள் வழங்கப்பட்டுவந்தன.

கடந்த அரசாங்கங்களில் றேபியா (புனர்வாழ்வு அதிகார சபை), புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு, பின்னர், அனர்த்த நிவாரண மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்டவற்றில்; மக்கள் தங்களின் இழப்பீடுகளைப் பெறுவதற்காகவேனும் பொறிமுறைகள் இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களில் சிலர், இவற்றின் ஊடாக இழப்பீடுகளைப் பெற்றுவந்தனர்.
ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் இந்தப் பொறிமுறைகள் இல்லை. சட்டப்படியாக புனர்வாழ்வு இழப்பீடுகள் எவற்றையும் பெறக்கூடிய அதிகாரபூர்வ பொறிமுறைகள் எவையும் இல்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், யுத்தம் முடிந்த பின்னர் சமாதானச் செயலகம், நிவாரணச் செயலகம் என்பவற்றை மூடிவிட்டார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் இழப்பீடுகளைப் பெறுவதாயின், தற்போது இரண்டு வழிகள் மாத்திரமே உள்ளன. ஒன்று உயர் நீதிமன்றத்தை நாடவேண்டும். இது ஏழை மக்களுக்கு இயலாத காரியம். மற்றையது, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகும். எனவே, நிலைமாற்று நீதியில் சில பொறிமுறைகளைப் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .