2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதான வீதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2016 மே 24 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-த.தவக்குமார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் சேதமைடந்து, மக்கள் போக்குவரத்தில் ஈடுபடமுடியாத நிலையில் காணப்பட்ட பிரதான வீதிகளான முனைத்தீவு வீதி மற்றும் மகிழுர், களுதாவளை பிரதேசத்தில் இரு வீதிகளும் புனரமைப்புச்செய்ய 60 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக வணிகத்துறை அமைச்சின் ஆலோசகரும் பட்டிருப்பு தொகுதியின் அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை(22) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“30 வருடங்களாக எமது நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் இந்த வீதிகளினூடாக குறிப்பாக நாளாந்தம் போக்குவரத்தில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதில் நீண்டநாட்களாக பல அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

அண்மையில் உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடனான கலந்துரையாடலின் போது இந்த வீதிகளை புனரமைப்புச்செய்ய 60 மில்லியன் ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .