2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் 11 வேலைத்திட்டங்கள்

வா.கிருஸ்ணா   / 2019 நவம்பர் 23 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாநகரில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1,800 மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன், 11 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, மட்டக்களப்பு மாநகரசபை மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு மாநகருக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்களின் சாத்தியவளம் பற்றிய கலந்துரையாடலானது, மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நேற்று (22), மாநகர மேயரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மாநகர முதல்வரின் 1,000 நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1,800 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், 11 வேலைத்திட்டங்களுக்கான அனுமதிகள், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன்படி, நகர மத்தியில் விற்பனைத் தொகுதியுடன் கூடிய நவீன கடைத்தொகுதி, வாவிக்கரை ஓரமான நடைபாதையமைப்பு, சூரிய மின் கலத்துடன் கூடிய வாகன தரிப்பிடம், கலாசார கேட்போர் கூடம், மாநகர அலுவலக கட்டடம், நாவற்குடா பொதுச்சந்தை புனரமைப்பு, சின்ன ஊறணியில் வர்த்தக மண்டபம், நீர் வடிந்தோடும் வகையில் தோனாக்களைப் புனரமைத்தல் என, பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கிலும் அதன் சாத்தியவளம், செலவு விவங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலும் மேற்படிக் கலந்துரையாடல் அமைந்திருந்தது.

இக்கலந்துரையாடலில், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் திட்டப் பணிப்பாளர் காமினி விஜயவர்த்தன, மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ், மாநகர பொறியிலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .