2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் 1,000 புதிய வீடுகள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 20 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சின் ஏற்பாட்டில்; 1,000 வீடுகளுக்கான நிர்மாணவேலையும் 726 வீடுகளுக்கான புனரமைப்பு வேலையும் இம்மாதத்தில்; ஆரம்பிக்கப்பட்டு, எதிர்வரும் நவம்பர் மாதம் பூர்த்தியாக்கப்படுமென மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

கடந்த யுத்தம் மற்றும் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.  

1,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 800 மில்லியன் ரூபாயும் 726 வீடுகளைப் புனரமைப்பதற்காக 145.2 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு வீடும் ஒரு வரவேற்பறை, 02 படுக்கையறைகள், ஒரு சமையலறை, ஒரு குளியலறை ஆகியவற்றைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படவுள்ளது. வீடொன்றின் நிர்மாணத்துக்காக 8 இலட்சம் ரூபாய் படியும் வீடொன்றின் புனரமைப்புக்காக 2 இலட்சம் ரூபாயும் செலவாகுமெனவும் அவர் கூறினார்.  

ஏறாவூர் நகர், ஏறாவூர்பற்று, காத்தான்குடி, கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று மேற்கு, வாகரை, வாழைச்சேனை, கிரான், ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, மண்முனை வடக்கு, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

பிரதேச செயலகப் பிரிவுகள் ரீதியாக பிரதேச செயலாளர்களின் வழிகாட்டல்களுடன் கிராம உத்தியோகஸ்;தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களினால் இதற்கான பயனாளிகள் தெரிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .