2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முகத்துவாரம் அணைக்கட்டு கைவிடப்பட்டு விட்டதா?

Gavitha   / 2016 மார்ச் 25 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நவகிரி நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிலுள்ள முகத்துவாரம் அணைக்கட்டை நீர்ப்பாசனத் திணைக்களம் கைவிட்டு விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பல புனரமைப்பு வேலைகள் அங்கு செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் அவை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக அப்படியே இருப்பதுமே இந்த சந்தேகத்துக்கு காரணமாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

மேற்படி அணைக்கட்டின் மேற்பகுதியிலுள்ள மண் அணை, கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது சேதடைந்தது. இருப்பினும், இது ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் இன்னும் புனரமைக்கப்படவில்லை. இதேவேளை, அணைக்கட்டின் சில கதவுகள் உரிய முறையில் பூட்டவும் திறக்கவும் முடியாது காணப்படுகின்றது.

இதன் காரணமாக வெள்ள காலங்களிலும் ஓரிரு கதவுகள் பூட்டியிருப்பதனால், வெள்ளம் வடிந்தோடுவதற்கு தடை ஏற்படுகின்றது. அணைக்கட்டின் பாய்ச்சல் வாய்க்காலில், மண் படிந்து தூர்ந்து காணப்படுகின்றது. வெள்ளச்சேதம் மற்றும் மண் படிவு காரணமாக 1/4ஏக்கர் வயலுக்குக்கூட முகத்துவார அணைக்கட்டின் மூலம் நீர்ப்பாசன வசதி அளிக்கப்படுவதில்லை என்று விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .